மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா. சபையில் ஒருமித்த தீர்மானம் - விமானத்தின் கருப்பு பெட்டிகளை மலேஷிய அரசிடம் கிளர்ச்சியாளர்கள் ஒப்படைப்பு

Jul 22 2014 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிழக்கு உக்ரைன் வான் பகுதியில் பறந்தபோது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் 2 கருப்புப் பெட்டிகள், இன்று மலேசிய நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

நெதர்லாந்து நாட்டிலிருந்து மலேசியாவுக்கு சென்றுகொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், உக்ரைன் நாட்டின் கிழக்கு வான் பகுதியில் பறந்தபோது, ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில், 298 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உக்ரைன் ஆட்சியாளர்களும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் 2 கருப்புப் பெட்டிகளை உக்ரைன் நாட்டின் Donetsk நகரில், மலேசிய நிபுணர்களிடம், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் மூத்த தலைவர் Aleksander Borodai ஒப்படைத்தார். இது தொடர்பாக இருதரப்பினரும் ஆவணம் ஒன்றில் கையெழுத்திட்டனர். பின்னர் Borodai-யும் மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலைச் சேர்ந்த Colonel Mohamed Sakri-யும் கைகுலுக்கினர். இதனிடையே, மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது தொடர்பான புலன் விசாரணையில் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து கழகம் முக்கிய பங்காற்ற வேண்டும் என ஐ.நா.வுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதியான Liu Jieyi வலியுறுத்தியுள்ளார். கட்டுப்பாடற்ற புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானம் அனைத்து தரப்பினரிடமும் ஒருமித்த நம்பிக்கையையும், ஒத்துழைப்பையும் விரிவுப்படுத்த உதவும் என சீனா நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00