பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு எதிராக, நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்தவர்களை உடனடியாக விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 16 2014 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு எதிராக, நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்தவர்களை உடனடியாக விடுவிக்குமாறு அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ்செரீப் பதவி விலக வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரானிகானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினரும், தக்ருல் -காத்ரியின் பாத் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி முதல் இவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நவாஸ் செரீப் வீட்டை முற்றுகையிட சென்றபோது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அதைதொடர்ந்து அரசுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இம்ரான் கான் மற்றும் காத்ரி கட்சியினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் பேச்சுவார்த்தையை இம்ரான்கானும், காத்ரியும் முறித்து கொண்டனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஏராளமானவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 100 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மறுநாளே இந்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், போராட்டக்காரர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது. இருந்தபோதும், இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து வருகிற 17-ந்தேதி விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00