நார்வே நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 3 பேர் பலி - காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதி

Jul 31 2014 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

நார்வே நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த பலர், சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து நார்வே நாட்டிற்கு இயக்கப்படும் சுற்றுலா பேருந்துகளில் ஒன்றான இந்த பேருந்து, நார்வே நாட்டில் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 3 பேர், பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பலர், அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில், பேருந்து வேகமாகச் சென்று கவிழ்ந்த சம்பவம், பயணிகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த பேருந்தில் பயணம் செய்த அனைவருமே சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால், விபத்துக்கான காரணத்தை யாராலும் சரிவர கூறமுடியவில்லை என்றே தெரிகிறது. பேருந்தில் பயணம் செய்த 16 பேரில், காயமடைந்த 13 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில், பலர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்தபோது, பெரிய சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் இந்த விபத்து குறித்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00