சர்வதேச விண்வெளி ஆய்வகத்திற்கு ரஷ்ய வீராங்கனை எலினா செரோவா பயணம் : 6 மாத காலத்திற்கு பணிகளை மேற்கொள்கிறார்

Sep 27 2014 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச விண்வெளி ஆய்வகத்திற்கு ரஷ்ய வீராங்கனை எலினா செரோவா பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி ஆய்வகத்திற்குச் செல்லும் 4-வது பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைத்து வருகின்றன. அதன் கட்டுமான பணிக்காக 6 மாதத்துக்கு ஒருமுறை 3 விண்வெளி வீரர்கள் அங்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கஜகஸ்தானில் பைசாஜர் விண்வெளி தளத்தில் இருந்து ரஷ்யாவின் கோயுஷ் விண்கலம் மூலம் 3 வீரர்கள் விண்வெளி நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில், ரஷ்ய வீரர் Alexander Samo kutyaev, ரஷ்ய வீராங்கனை Elena Serova மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் Barry Wilmore ஆகியோர் அடங்குவர். இவர்களில், எலினா செரோவா, விண்வெளி ஆய்வு மையத்திற்குச் செல்லும் 4-வது ரஷ்ய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குப் பதிலாக, ரஷ்யாவைச் சேர்ந்த Maxim Suraev, அமெரிக்காவைச் சேர்ந்த Reid Wiseman மற்றும் Alexander Gerst ஆகியோர் பூமிக்குத் திரும்புகின்றனர். சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்திற்கு தற்போது சென்றுள்ள வீரர்கள் அனைவரும், வரும் 6 மாத காலத்திற்கு அங்கு தங்கி பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00