மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட கிழக்கு உக்ரைன் பகுதியில் விசாரணை மேற்கொள்ள சர்வதேச புலனாய்வுக் குழுவினர் சென்றடைந்தனர்

Aug 1 2014 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட கிழக்கு உக்ரைன் பகுதியில் விசாரணை மேற்கொள்வதற்காக, சர்வதேச புலனாய்வுக் குழுவினர் அப்பகுதியை சென்றடைந்தனர்.

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளும் வகையில் ராணுவத் தாக்குதல் நிறுத்தப்படுவதாக உக்ரைன் அரசு அறிவித்திருந்ததையடுத்து உக்ரைன் படையினருக்கும், ரஷிய ஆதரவு படையினருக்கும் பல நாள்களாக நீடித்து வந்த சண்டை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் விசாரணை மேற்கொள்வதற்காக, சர்வதேச புலனாய்வுக் குழுவினர் அப்பகுதியை சென்றடைந்தனர். இதனிடையே, வாஷிங்டனில் ஜி-7 நாடுகள் புதன்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், உக்ரைனில் பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் ரஷியாவுக்கு உள்ளதாகவும் அதனை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு சாத்தியமுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்குப் பாதகமான நடவடிக்கைகளை ரஷியா தொடர்ந்து மேற்கொண்டால், அந்நாட்டின் பொருளாதாரத் துறையில் முக்கிய அங்கம் வகிக்கும் நிறுவனங்களின் மீது இந்த வாரம் ஜி7 நாடுகள் கூட்டாக கடும் பொருளாதாரத் தடை விதிக்கவும் தயாராக இருக்கின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00