லிபியாவில் உள்நாட்டுப்போர் தீவிரம் - தலைநகர் திரிபோலி அருகே அமைந்துள்ள அல்பிரிக்கா எரிபொருள் கிடங்கு மீது ராக்கட் தாக்குதல்

Jul 30 2014 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

லிபியாவில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் திரிபோலி அருகே அமைந்துள்ள அல்பிரிக்கா எரிபொருள் கிடங்கு மீது ராக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், 6 மில்லியன் லிட்டர் பெட்ரோல், தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

லிபியாவில், கடந்த 2011-ம் ஆண்டுவரை 34 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த மோம்மர் கடாஃபியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து போராட்டக்குழுக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஜிண்டான் மற்றும் இஸ்லாமிய போராட்டக்குழுவினரிடையே, மோதல் முற்றி வருகிறது. திரிபோலி விமானநிலையம் ஜிண்டான் போராட்டக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் இந்த விமானநிலையம் மீது இஸ்லாமிய போராட்டக்குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் பெங்காசி நகரின் மீதும் இந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு, பெங்காசி நகர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 59 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லிபியாவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் பொதுமக்கள் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு திரிபோலியில் நடந்த தாக்குதலின்போது இருதரப்பினரும் ராக்கட் மற்றும் பீரங்கி மூலம் தாக்கிக்கொண்டனர். தொடர் தாக்குதல் காரணமாக லிபியாவில் மோசமான நிலைமை நிலவுகிறது. இவ்வாறாக, லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள தனது தூதரகத்தை அமெரிக்கா மூடியது. துருக்கி மற்றும் ஐ.நா. சபையும் தங்களது தூதரக உறவை முறித்து கொண்டன.

இந்நிலையில், தலைநகர் திரிபோலியின் அருகே அமைந்துள்ள அல்பிரிக்கா எரிபொருள் கிடங்கு மீது, கிளர்ச்சியாளர்கள் ராக்கட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அங்கிருந்த 6 மில்லியன் லிட்டர் பெட்ரோல், தொடர்ந்து எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் முயற்சியும் தோல்வியடைந்ததால், கட்டுக்கடங்காமல் அல்பிரிக் பகுதியில் தீ பரவி வருகிறது. லிபியாவில் நிலவும் இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக, தங்கள் நாடுகளைச் சேர்ந்த மக்களை உடனடியாக தாய்நாட்டிற்குத் திரும்ப பல உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00