ஜப்பானில் புல்லட் ரயில் இயங்கத் தொடங்கியதன் ஐம்பதாவது ஆண்டு விழா : பொதுமக்கள் வரவேற்பு

Sep 27 2014 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் புல்லட் ரயில் இயங்கத் தொடங்கியதன் ஐம்பதாவது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வர்த்தக நோக்கத்தில் பயணத்தை மேற்கொள்பவர்கள், ஒரே நாளில் தாங்கள் விரும்பும் முக்கிய நகரங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் புல்லட் ரயில்கள் இருப்பதால், மக்களிடையே அவை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஜப்பானில் கடந்த 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிவேக ரயில் என்ற பெயர் பெற்ற புல்லட் ரயில் தனது சேவையைத் தொடங்கியபோது ஒரு நவீன போக்குவரத்து அமைப்புடன் பொருளாதார சக்தி கொண்ட நாடாக ஜப்பான் மாறுவதற்கான வருகையை அறிவிக்கும் வகையில் அது இருந்தது.

இரண்டாம் உலகப் போர் காரணமாக, சிதிலமடைந்திருந்த ஜப்பான், சரியாக இருபது வருடங்களுக்குள் 'ஷிங்கன்சென்' என்ற பெயர் கொண்ட இந்த புதிய அதிவேக ரயிலை அறிமுகம் செய்தது. இதன்மூலம் தங்களின் பட்டினிக்காலம் முடிவுக்கு வரும் என்றும், ஜப்பானில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என்ற உணர்வு தோன்றியதாகவும் அந்நாட்டு மக்களால் கூறப்பட்டது.

கனவுகளின் எக்ஸ்பிரஸ் என்று செல்லமாகக் குறிப்பிடப்பட்ட புல்லட் ரயில், உண்மையிலேயே ஜப்பானிய மக்களுக்கு எதிர்காலம் குறித்த கனவுகளை அளித்தது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது ஜப்பான், வளர்ந்த நாடுகளையும் மிஞ்சியதாக உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையான ரயில்களின் கட்டுமானப்பணி பெரும் கடன் சுமையை அதிகரித்ததால், பொதுமக்களின் எதிர்ப்பும் அதிகமானது.

ஆனால் இரண்டரை மணி நேரமாக பயண நேரத்தைக் குறைத்து, ஜப்பானின் இரண்டு முக்கிய நகரங்களான டோக்கியோவையும், ஒசாகாவையும் இந்த ரயில்கள் இணைக்கின்றன. இதனால் வர்த்தக நோக்கில் பயணத்தை மேற்கொள்ளுபவர்கள் ஒரே நாளில் தங்களின் பயணத்தை முடிக்க முடியும் என்பது இதன் சிறப்பாகும்.

இதுமட்டுமின்றி புதிய நுகர்வோர் பொருளாதாரத்தில் பொதுமக்களின் பயணங்களும் எளிதாவதுடன் கியோடோ போன்ற புராதன நகரங்களை அடைவதும் சுலபமாகியுள்ளது. அதுபோல் ஃப்யூஜி எரிமலையின் கம்பீர அழகையும் இந்தப் பயணத்தில் கண்டுகளிப்பது சாத்தியாமாகின்றது என்று ரயில்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00