காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளித் தாக்குதல் - 100 குழந்தைகள் உட்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை 550-ஆக உயர்வு

Jul 22 2014 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

காசா பகுதியில் நேற்றிரவு, இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 6 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால், 100 குழந்தைகள் உட்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை 550-ஆக உயர்ந்துள்ளது.

ஹமாஸ் தீவிரவாதிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ராக்கெட்டு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 550ஆக அதிகரித்துள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் நேற்றிரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 6 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், 14 அம்சங்கள் கொண்ட அமைதி உடன்பாட்டுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, காசா பகுதிக்கு சென்றுள்ளார். இதையடுத்து, போர் விரைவில் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00