அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் : அல்டர்னேடிவ் நோபல் பரிசுக்கான பெயர் பட்டியலில் இடம் பிடித்தார்

Sep 27 2014 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடெனின் பெயர் 'alternative Nobel' பரிசுக்கான பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

நோபல் பரிசு பெற தகுதி உடையவர்களில் புறக்கணிக்கப்படுபவர்களுக்காக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் வான் உயெக்ஸ்குல் கடந்த 1980ஆம் ஆண்டில் உருவாக்கிய விருதே மாற்று நோபல் விருதாகக் கருதப்படுகிறது. இந்த விருதுகளைப் பெறும் இந்த ஆண்டிற்கான தேர்வாளர்கள் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவின் விசில் புளோயரான எட்வர்ட் ஸ்னோடெனின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் ரகசிய புலனாய்வுத்துறையின் கணினிப் பிரிவில் பணி புரிந்த எட்வர்ட் ஸ்னோடென் அந்நாடு பிற நாடுகளை ரகசியமாகத் துப்பறிவதை வெளியுலகிற்குத் தெரிவித்ததன்மூலம் அரசின் கோபத்திற்கு ஆளானார். தண்டனைக்குப் பயந்து அங்கிருந்து தப்பிய அவர் தற்போது ரஷ்யாவில் மறைந்து வாழ்ந்து வருகின்றார். இவருடைய இந்த செயலுக்காக கௌரவ விருது வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த செய்தியை வெளியிட சுவீடனின் வெளியுறவுத்துறை அலுவலகம் தனது ஊடக அறையைப் பயன்படுத்திக்கொள்ள இந்த அமைப்பிற்கு அனுமதி வழங்கவில்லை. வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவிற்குத் தேர்வாளர்கள் அனைவரும் அழைக்கப்பட உள்ளனர் என்று இந்த அமைப்பின் இயக்குனர் ஓலே வான் உயெக்ஸ்குல் தெரிவித்தார்.

ஸ்னோடெனுக்கு அளிக்கப்படும் கௌரவ விருதில் பரிசுப்பணம் எதுவும் இணைந்திருக்காது என்றபோதிலும் அவரது வழக்குகளுக்கான செலவிற்கு உதவும் வகையில் நிதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதுபோல் இந்த விழாவில் ஸ்னோடென் பங்கெடுக்கும் சாத்தியங்கள் பற்றியும் சுவீடன் அரசுடனும், ஸ்னோடெனின் வழக்கறிஞர்களுடனும் விவாதிக்க உள்ளதாகவும் ஓலே தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00