சிலி நாட்டில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ - 15 பேர் பலி, 2 ஆயிரம் வீடுகள் தீக்கிரை

Apr 15 2014 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயில் சிக்கி, இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2 ஆயிரம் வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

சிலி நாட்டின் வால்பரைசோ என்ற இடத்தில் கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட காட்டுத்தீ, வேகமாக அந்தப் பகுதி முழுவதும் பரவியது. தீயை அணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், காற்றின் வேகம் காரணமாக, தீயை கட்டுப்படுத்த இயலாமல் போனதுடன், அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஹெலிகாப்டர்கள், விமானங்கள் பயன்படுத்தப்பட்டு தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காட்டுத்தீக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் அந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பற்றி எரியும் காட்டுத்தீ சுமார் ஒரு வார காலம் நீடிக்கும் என கூறப்படுவதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதுடன், உறக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00