அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ : அருகில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டர்

Sep 16 2014 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தின் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால், அருகில் வசிக்கும் வீடுகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தின் Orange Country நகரின், Cleveland தேசிய வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காட்டுத்தீ பற்றியது. கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீசியதால் தீ மளமளவென மற்றப் பகுதிகளுக்கும் வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இரவு முழுவதும் சுமார் ஆயிரத்து 300 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து கருகின. மேலும் தொடர்ந்து சுமார் 350 ஏக்கர் வரை தீ வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, அருகாமையில் உள்ள 30 வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடும் வெப்பத்துடன் அனல் காற்று தொடர்ந்து வீசி வருவதால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாகாணத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்கெனவே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00