'காந்தி' திரைப்படத்தை தயாரித்து இயக்கிய பிரிட்டிஷ் இயக்குநர் Richard Attenborough காலமானார் : அவருக்கு வயது 90

Aug 25 2014 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

'காந்தி' திரைப்படத்தை தயாரித்து இயக்கியதன் மூலம் 8 ஆஸ்கர் விருதுகளை வென்று உலகப் புகழ்பெற்ற, பிரிட்டிஷ் இயக்குநர் மற்றும் நடிகர் Richard Attenborough நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 90.

பிரிட்டிஷ் இயக்குநரான Richard Attenborough கடந்த 1982ம் ஆண்டு காந்தி திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். உலக அளவில் பெரும் மதிப்பையும் வரவேற்பையும் பெற்ற காந்தி திரைப்படம் அவருக்கு சிறந்த இயக்குநர், சிறந்த தயாரிப்பாளர் ஆகிய 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத்தந்ததோடு, சிறந்த நடிகர், சிறந்த உடை வடிவமைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழும் ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது.

காந்தி படத்தை சிறப்பாக தயாரித்து இயக்கியதற்காக இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், Attenborough-க்கு சிறப்பு விருந்தளித்து 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தார். Richard Attenborough, ஜூராசிக் பார்க் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 90 வயதான இவர், உடல்நலம் குன்றியிருந்த நிலையில், தனது லண்டன் இல்லத்தில் நேற்று நள்ளிரவு காலமானார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00