வடமேற்கு போஸ்னியாவில் சவக்குழியில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 400 போஸ்னியர்களின் உடல்கள் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டன

Jul 24 2014 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடமேற்கு போஸ்னியாவில் சவக்குழியில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 400 போஸ்னியர்களின் உடல்கள், முறைப்படி திங்கட்கிழமை அடக்கம் செய்யப்பட்டன. முன்னதாக, அங்குள்ள விளையாட்டுத் திடலில் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1990-களில் யுகோஸ்லாவியா இரண்டாக உடைந்தபோது, போஸ்னியா மற்றும் குரோஷியாவின் சில பகுதிகளை உள்ளடக்கி செர்பியர்கள் தனி நாடு உருவாக்க முயன்றனர். இதையொட்டி தங்கள் பகுதியில் இருக்கும் செர்பியர்கள் அல்லாதவர்களை அவர்கள் விரட்டியடித்தனர். இதில், செர்பியர்கள் அல்லாத ஏராளமானோர் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட உடல்களை மறைக்க, மிகப்பெரிய குழிகள் தோண்டப்பட்டு உடல்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக அதில் புதைக்கப்பட்டன. இதனால் சுமார் 10 ஆயிரம் போஸ்னியர்கள் காணாமல் போயினர்.

இந்நிலையில் வடமேற்கு போஸ்னியாவின் டொமாசிகா என்ற கிராமத்தில் சவக்குழி ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சுமார் 400 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றது. இதில், கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் அனைத்தும் கடந்த 1992-ம் ஆண்டு பிரிஜிடோர் என்ற கிராமத்தில் கொலைசெய்யப்பட்டவர்களின் உடல்கள் எனத் தெரியவந்தது. சவக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட உடல்களில் 284 பேரின் உடல்கள், போஸ்னியாவில் முறைப்படி மீண்டும் அடக்கம் செய்யப்பட்டன. முன்னதாக அப்பகுதியில் உள்ள விளையாட்டுத் திடலில் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00