சிறுவர்களை கவர்ந்த பேட்மேன் கற்பனை கதாபாத்திரத்திற்கு மேலும் ஒரு சிறப்பு - அமெரிக்காவில் அஞ்சல்தலை வெளியீடு
Oct 10 2014 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எண்ணற்ற சாகசங்களால் சிறுவர்களை கவர்ந்த பேட்மேன் கற்பனை கதாபாத்திரத்திற்கு, அமெரிக்காவில் அஞ்சல்தலை வெளியீட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
கற்பனையாக இருந்தாலும், தனது சாகசங்களால் சிறுவர் மற்றும் பெரியவர்களை கவர்ந்துள்ள பேட்மேன் கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். இந்த கதாபாத்திரம் உருவானதன் 75-வது ஆண்டையொட்டி, சிறப்பு அஞ்சல் தலை வெளியிட அமெரிக்க தபால்துறை முடிவு செய்தது. இதனையடுத்து, நியூயார்க்கில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் பேட்மேன் போல உடையணிந்த நபர் பங்கேற்றார். நிஜமான கதாநாயகர்கள் மத்தியில், அஞ்சல்தலை வெளியிட்டிருப்பது கற்பனை கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.