அமெரிக்காவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் வாழும் பாண்டா கரடி ஒன்று தனது 2-வது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தது

Jul 31 2014 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் சான் டியாகோ மிருகக்காட்சி சாலையில் வாழும் பாண்டா கரடி ஒன்று தனது 2-வது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தது. இதையொட்டி, அந்த பாண்டா கரடிக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகள் வழங்கப்பட்டன.

அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்கினங்களுக்கு சிறப்பான முறையிலும், வித்தியாசமாகவும் பிறந்த நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில், தற்போது, 2-வது வயதை எட்டியுள்ள Xiao Liwu என்ற பாண்டா காரடி குட்டி, மிகவும் உற்சாகமாக தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது. Xiao Liwu என்றால், சிறிய பரிசு பொருள் என்ற அர்த்தத்தை கொண்ட இந்த பாண்டா கரடிக்கு 4 அடி உயரத்தில் ஐஸ் கட்டியால் உருவாக்கப்பட்ட கேக் வழக்கப்பட்டது. அத்துடன், அந்த பாண்டா கரடிக்கு மேலும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் வகையில், ஆப்பிள், கேரட் உள்ளிட்ட காய்கறிகளும் வழங்கப்பட்டன. 100 பவுண்ட் எடைக் கொண்ட இந்த பாண்டா கரடி, தனக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது. இந்த பரிசுப் பொருட்களில் இருந்த உணவுகளை அந்த பாண்டா கரடி, மிகவும் உற்சாகமாக உண்டு மகிழ்ந்தது. இதனை அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளும், பூங்கா ஊழியர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள், அங்குள்ள பாண்டா கரடிகளுடன் மகிழ்ச்சி பொங்க புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00