தீவிரவாதிகளின் சொர்க்கபூமியாக பாகிஸ்தான் தொடர்ந்து விளங்குவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு - உலக நாடுகளுக்கு பொது அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை

Aug 27 2014 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் தொடர்ந்து விளங்குவதாக அமெரிக்கா மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

தீவிரவாத செயல்கள், சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவ அலுவலக செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜான் கிர்பை தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாக குற்றம்சாட்டியுள்ளார். இது பாகிஸ்தான் உட்பட உலக நாடுகளுக்கு பொது அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார். உள்ளூரில் தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பாகிஸ்தான், அந்த தீவிரவாதிகள் சர்வதேச அளவில் செயல்படாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்கு அமெரிக்க முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் ரியர் அட்மிரல் ஜான் கிர்பை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00