தும்பிக்கையில் தூரிகை பிடிக்கும் அமெரிக்க யானை - ஓவியங்களை கண்டு பிரமித்த மக்கள்

Jul 31 2014 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

தும்பிக்கையில் தூரிகை பிடித்து அமெரிக்க யானை தீட்டும் ஓவியங்களை கண்டு அப்பகுதி மக்கள் பிரமிக்கின்றனர்.

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள டொலெடோ உயிரியல் பூங்காவில் ரெனீ என்ற 32 வயதான ஆஃப்ரிக்க யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. ஐந்தறிவு படைத்த இந்த யானை, மனிதர்களின் கற்பனைத் திறனுக்கு சவால் விடும் வகையில், தூரிகையைக் கொண்டு கண்கவர் ஓவியங்களை வரைந்து வியப்பை ஏற்படுத்துகிறது. அண்மையில், நியூயார்க்கில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு சங்கம், யானை தந்தங்களை விற்பனைக்கு வைத்தது. இவற்றை வாங்க வருபவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, யானைகள் ஓவியம் வரையும் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 96 யானைகள் பங்கேற்றன. அவற்றில், ரெனீ வரைந்த கண்கவர் ஓவியங்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன. இதனிடையே, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தனது ஹோட்டலில் ஆந்தைகளை வளர்த்து வருகிறார். ஹாரிபாட்டர் ஹாலிவுட் திரைப்படத்தைக் கண்டு இப்படி ஒரு ஹோட்டலை வடிவமைத்ததாக உரிமையாளர் தெரிவித்தார். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆந்தைகளை கண்டு வியப்பதோடு, அவற்றை தங்கள் தோளில் நிற்க வைத்து புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00