அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை மற்றும் ராணுவ தலைமையகம் மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் - வடகொரியா மிரட்டலால் பரபரப்பு

Jul 29 2014 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக தீராப்பகை இருந்து வரும் நிலையில், அண்மையில் அமெரிக்கா தலைமையில் தென்கொரியாவும், ஜப்பானும் பங்கேற்ற கடற்படை போர் ஒத்திகை நடைபெற்றது. இது, வடகொரியாவுக்கு மேலும் ஆத்திரம் மூட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் Pyongyang நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான ராணுவ பேரணியில் கலந்துகொண்டு பேசிய வடகொரிய ராணுவ தலைமை அதிகாரி Hwang Pyong So, வடகொரியாவின் இறையாண்மைக்கும், வாழ்வாதாரத்திற்கும் அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டினார். இதே நிலை தொடர்ந்து நீடிக்குமானால், அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை மீதும், அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் மீதும் அணுஆயுத ராக்கெட் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இதன் மூலம் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அணு ஆயுத ராக்கெட் திறன் வடகொரியாவுக்கு உள்ளது என்பதை மறைமுகமாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் வடகொரியாவிடம் இத்தகைய திறன் படைத்த அணு ஆயுத ராக்கெட் எதுவும் இல்லையென சர்வதேச பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00