அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவிலிருந்து சில மனிதக்குரங்குகள் தப்பியோடியதால், பார்வையாளர்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தல்

Apr 11 2014 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் இருந்து சில மனிதக்குரங்குகள் தப்பியோடியதால், பார்வையாளர்கள் வெளியே நடமாடாமல் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்படி உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிஸ்ஸோரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் நகர உயிரியல் பூங்காவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சில மனிதக்குரங்குகள் நேற்று அங்கிருந்து தப்பி அதேபகுதியில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இவற்றால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பார்வையாளர்கள் வெளியே நடமாடாமல் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி உயிரியல் பூங்கா நிர்வாகம் கேட்டுக்கொண்டது. மேலும், உயிரியல் பூங்காவும் தற்காலிகமாக மூடப்பட்டதோடு, மனிதக்குரங்குகளின் நடமாட்டமும் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்டது. சிலமணி நேரம் கழித்து, சுதந்திரக் காற்றை சுவாசித்த மகிழ்ச்சியுடன் மனிதக்குரங்குகள் மீண்டும் தங்களின் இருப்பிடத்திற்கு திரும்பி சென்று விட்டதாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று தெரிவித்தது. எனினும், இதனை உயிரியல் பூங்கா உறுதி செய்யவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00