அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடிக்கூட்டம் - பெண்ணை தாக்கியதால் பரபரப்பு

Apr 15 2014 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஊருக்குள் புகுந்து, அட்டகாசத்தில் ஈடுபட்ட கரடிக்கூட்டம் தாக்கியதில், ஒரு பெண் படுகாயமடைந்தார். இதுகுறித்து, தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, மயக்க ஊசி செலுத்தி ஒரு கரடியை பிடித்தனர்.

ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த லேக் மேரி என்ற இடத்தில் வசிக்கும் டெர்ரி ஃப்ரனா என்ற பெண் சம்பவத்தன்று தங்கள் வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத வகையில், கரடிக்கூட்டம் அந்த பெண்ணை தாக்கியது. இதில், அந்த பெண்ணுக்கு முகம் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டன. கரடிக்கூட்டத்திடம் போராடித் தப்பிய ஃப்ரனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தெரியவந்ததும், வனத்துறை அதிகாரிகள் கரடிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். உணவுப்பொருட்களை வீட்டுக்கு வெளியே வீசியெறியவேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டதோடு, கரடிகளை தேடிப்பிடிக்க முற்பட்டனர். அப்போது, 30 அடி உயரத்தில் மரத்தின் மீது கரடி பதுங்கியிருப்பதை வனத்துறை அதிகாரிகள் கண்டனர். உடனடியாக மயக்க ஊசி செலுத்தி அந்த கரடியை பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00