ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் - அமெரிக்கா எச்சரிக்கை

Aug 27 2014 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. பிரிட்டன், ஃபிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 6 நாடுகளும் தங்களது ராணுவத்தை அனுப்பி அமெரிக்காவிற்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவப்போவதாக அறிவித்து, கடந்த 2 ஆண்டுகளாக தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அழித்தொழிக்கும் வகையில், சிறுபான்மை குர்து இன இஸ்லாமிய அமைப்புக்கு அமெரிக்கா ஆயுத உதவியும், பொருளாதார உதவியும் வழங்கி வருகிறது. அத்துடன் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத நிலைகளின் மீதும், நேரடியாக விமானப்படைத் தாக்குதலைத் தொடங்கியது. அதன்மூலம் குர்தீஸ் இன மக்கள் வாழும் இர்பில் நகரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் ஆக்கிரமித்திருந்த 2 முக்கியத் தளங்களை அமெரிக்கா விடுவித்ததோடு, அந்த அமைப்பின் 2 ராணுவ பீரங்கிகளையும் தாக்கி அழித்தது. இத்தாக்குதல் தொடரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், ராணுவத்தை அனுப்பவும், நிதி ஆதாரங்களை ஒதுக்கீடு செய்யவும் பிரிட்டன், ஃபிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 6 நாடுகள் முடிவு செய்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00