வடகொரியாவுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க பயணி தனது விசாவை கிழித்துப் போட்ட குற்றத்திற்காக 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து வடகொரிய நீதிமன்றம் தீர்ப்பு

Sep 16 2014 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரியாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுலா சென்ற அமெரிக்க பயணி தனது விசாவை கிழித்துப் போட்ட குற்றத்திற்காக, 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து வடகொரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கின் விமான நிலையத்தில் வந்திறங்கிய 24 வயதான அமெரிக்க பயணி மாத்யூ மில்லர் என்பவர், தன்னுடைய விசா அனுமதியைக் கிழித்துப் போட்டுவிட்டு அந்நாட்டில் தஞ்சம் கோரினார் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்பீல்ட் பகுதியைச் சேர்ந்த இவர் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அங்கு சுற்றுலா பயணியாக வந்த ஜெப்ரே போவ்லே என்ற 56 வயது அமெரிக்க பயணி, மாகாண கிளப் ஒன்றில் தனது பைபிள் புத்தகத்தை விட்டுச் சென்றதற்காக கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். கொரிய- அமெரிக்க மிஷனரியான கென்னெத் பே என்ற மற்றொரு அமெரிக்கர் 'விரோத செயல்கள்' என்ற குற்றச்சாட்டின்பேரில் ஏற்கனவே 15 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றார்.

இவர்கள் மூவரும் தங்களின் விடுதலை குறித்த கோரிக்கையை மேற்கொள்ள ஒரு உயர்மட்ட அரசு பிரதிநிதியை அமெரிக்கா அனுப்ப வேண்டும் என்று பத்திரிகை செய்தியாளர் சந்திப்பில் முன்னர் குறிப்பிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து வடகொரியா மனித உரிமைப் பிரச்சினைகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள தங்களின் பிரதிநிதியான ராபர்ட் கிங்கை பியாங்யாங்கிற்கு அனுப்புவதாக அமெரிக்கா பலமுறை தெரிவித்தும் இதற்கான அனுமதி இன்னமும் கிட்டவில்லை என்று கூறப்படுகின்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00