அமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட சிகரெட் நிறுவனம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Jul 22 2014 2:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட சிகரெட் நிறுவனமே இதற்கு காரணம் என தொடரப்பட்ட வழக்கில், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த சிந்தியா ராபின்சன் என்பவரின் கணவர் மைக்கேல் ஜான்சன், அளவுக்கு அதிகமாக சிகரெட் பிடித்து வந்துள்ளார். பல வருடங்களாக சிகரெட் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்த அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது கணவர் ராபின்சனுக்கு புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழக்க, குறிப்பிட்ட ஒரு சிகரெட் நிறுவனமே காரணம் என்று, சிகரெட்டை தயாரித்த ரெனால்ட்ஸ் நிறுவனம் மீது நீதிமன்றத்தில் அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார்.

புகைப் பிடிப்பதால் ஏற்படும் ஆபத்து உள்ளிட்ட விளைவுகள் குறித்து சிந்தியாவின் கணவர் ராபின்சன் போன்றவர்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்க, அந்த நிறுவனம் தவறிவிட்டதாகவும், இதன் காரணமாக உரிய நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிந்தியா ராபின்சனுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது. சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் நீதிமன்றம் குற்றம் சாட்டியது. இதன் மூலம் அனைத்து சிகரெட் கம்பெனிகளுக்கும் கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தொகை மிக அதிகம் என்றும், மாநில சட்டங்களையும், அமெரிக்க அரசியல் சாசனத்தையும் மீறும் வகையில் இருப்பதாக ரெனால்ட்ஸ் நிறுவன வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ப்ளோரிடா மாகாணத்தில் எந்த ஒரு தனியார் வழக்கிலும், இவ்வளவு பெரிய தொகை நஷ்ட ஈடாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00