முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் முகமது அலி, பயன்படுத்திய கையுறை - 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம்

Aug 1 2014 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் முகமது அலி, கடந்த 1971-ம் ஆண்டு பயன்படுத்திய கையுறை 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது.

குத்துச்சண்டையில் சாம்பியனாக விளங்கிய முகமது அலி, 1964-ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன் பின்னர் தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட அவர், 1971-ம் ஆண்டு ஜோ ஃப்ராசியர் என்ற வீரரிடம் தனது பட்டத்தை இழந்தார். Fight of the Century என அழைக்கப்பட்ட அந்த சண்டை அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சண்டையின் போது முகமது அலி பயன்படுத்திய கையுறை, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கையுறை தற்போது ஏலம் விடப்பட்டது. இதில், 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விலை போனது. இந்த போட்டியில் முகமது அலி தோற்றுப் போனாலும், 1974-ம்ஆண்டு நடைபெற்ற மற்றொரு சண்டையில், ஜோ ஃப்ராசியரை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00