சிறிய துடுப்பு படகில் ஆப்ரிக்காவிலிருந்து, அமெரிக்காவுக்கு பயணம் செய்த காதல் ஜோடி - புதிய உலக சாதனை படைப்பு

Jun 21 2014 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, சிறிய துடுப்பு படகில் ஆப்ரிக்காவிலிருந்து அமெரிக்காவின் New York நகருக்கு, பயணம் செய்து, புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த Riaan Manser என்ற துடுப்பு படகு செலுத்தும் வீரர் தனது காதலியும், வழக்கறிஞருமான Vasti Geldenhuys என்பவருடன் சேர்ந்து புதிய உலக சாதனை புரிய திட்டமிட்டார். இதற்காக ஆப்ரிக்காவிலிருந்து சீற்றம் மிகுந்த அலைகளைக் கொண்ட அட்லாண்டிக் கடல் வழியாக, அமெரிக்காவின் New York நகருக்கு துடுப்புப் படகில் செல்ல இருவரும் முடிவு செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் ஆப்ரிக்காவில் உள்ள Morocco நாட்டின் Agadir என்ற இடத்திலிருந்து இருவரும் "The Spirit of Madiba" என்ற துடுப்புப் படகில் தங்களது பயணத்தை தொடங்கினர். மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை கடந்து, திட்டமிட்டப்படி அவர்கள் New York நகரை வந்தடைந்தனர். புதிய உலக சாதனை புரிந்த மகிழ்ச்சியுடன் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக Riaan Manser தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00