பட்ஜெட் விமான திட்டத்தை கைவிடுவதாக ஏர் ஃபிரான்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு : விமானிகள் வேலைநிறுத்தத்தைக் கைவிட மறுப்பு

Sep 27 2014 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

பட்ஜெட் விமான திட்டத்தை கைவிடுவதாக ஏர் ஃபிரான்ஸ் விமான நிறுவனம் அறிவித்த பிறகும் அந்நிறுவனத்தின் விமானிகள் வேலைநிறுத்தத்தைக் கைவிட மறுத்துள்ளனர்.

பட்ஜெட் விமான நிறுவனங்களாலும், அரச குடும்பங்களின் ஆதரவு கொண்ட வளைகுடா விமான நிறுவனங்களாலும் ஐரோப்பாவில் இயங்கும் பல விமான நிறுவனங்கள் தொழில்முறைப் போட்டிகளை எதிர்கொண்டு வருகின்றன. இப்போட்டிகளை சமாளிக்கும் விதமாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான ஏர் ஃபிரான்ஸ் நிறுவனம், தங்களின் பெரும்பாலான விமான சேவைகளை குறைந்த கட்டண நிறுவனமான டிரான்ஸ் அவியாவிற்கு மாற்ற இருப்பதாகத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து தங்களுடைய அதிக சம்பளம் போன்ற பல சலுகைகளை குறைத்துக்கொள்ள விரும்பாத ஏர் ஃபிரான்ஸ் விமானிகள் வேலைநிறுத்தத்தைத் துவங்கினர். இதன் காரணமாக 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் முடங்கியுள்ளன. வேலைநிறுத்தம் தொடங்கி 11 நாட்கள் ஆகியுள்ள நிலையில், நாளொன்றுக்கு 20 மில்லியன் யூரோக்கள் வீதம் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஐரோப்பிய வான்வெளியில் தங்களது பட்ஜெட் நிறுவன விரிவாக்கத்தை கைவிட்டு, உள்நாட்டில் மட்டும் இந்த சேவையைத் தொடருவதாக ஏர் ஃபிரான்ஸ் நிறுவனம் அறிவித்தது. அதன்பின்னரும் விமானிகளின் பிரதான தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தைக் கைவிட மறுத்துள்ளது. இதற்கான மாற்று சலுகைத் திட்டங்களைக் குறிப்பிட்டுள்ள தொழிற்சங்கம், இன்று மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர இருப்பதாக அறிவித்துள்ளது.

பட்ஜெட் நிறுவனத்தைக் கைவிடுவது ஏர் ஃபிரான்ஸ் நிறுவனத்திற்கு பெரிய அடியாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேசமயம் குறைந்த அளவிலான சம்பளத்தைப் பெறும் பட்ஜெட் நிறுவனத்தின் விமானிகளைக் கொண்டு தாங்கள் மாற்றப்படலாம் என்ற அச்சம் ஏர் ஃபிரான்ஸ் விமானிகளிடையே தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00