தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் ஆர்வம் - மாநிலம் முழுவதும் ஏராளமானோர் உற்சாகத்துடன் வேட்புமனுத் தாக்‍கல்

Dec 14 2019 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரக உள்ளாட்சி வார்டு தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்வத்துடன் வேட்புமனுக்‍களை தாக்கல் செய்து வருகின்றனர்.

கடலூர் மேற்கு மாவட்டம் கீரப்பாளையம், காட்டுமன்னார்கோயில், மேல் புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுக்‍களை தாக்‍கல் செய்தனர். அப்போது கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்தில், கழகம் சார்பில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக நிர்வாகிகள், ஊர்வலமாக சென்று ஆர்வமுடன் மனு தாக்‍கல் செய்தனர்.

நீலகிரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக, குன்னூர் மற்றும் உதகையில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் ஒன்றியக்குழு மற்றும் திருப்பனந்தாள் ஒன்றியக் குழு, உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடும் கழகத்தினர், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தங்களது வேட்பு மனுக்களை உற்சாகத்துடன் தாக்கல் செய்தனர்.

தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் ஒன்றியக்குழு மற்றும் திருப்பனந்தாள் ஒன்றியக் குழு, உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடும் கழகத்தினர், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தங்களது வேட்பு மனுக்களை உற்சாகத்துடன் தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தினர் வேட்புமனுத் தாக்‍கல் செய்தனர். பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பெரம்பலூர் ஒன்றியத்தின் சார்பாக 7 பேரும், வேப்பந்தட்டை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்‍கான தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க.வினர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00