மாமல்லபுரத்தை அழகுப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்‍கை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - தவறினால் ஆஜராக நேரிடும் என எச்சரிக்‍கை

Dec 12 2019 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாப்பது தொடர்பான விவகாரத்தில் ஜனவரி 2-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு ஆட்சியருக்‍கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர், கடந்த அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபரின் வருகையையொட்டி, மாமல்லபுரம் நகரம் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இதனை நிரந்தரமாக பாதுகாக்கக்கோரி, நீதிபதி கிருபாகரன் கடந்த நவம்பர் 1-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன் வந்து பொது நல வழக்காக விசாரித்த நீதிபதிகள் திரு.வினீத் கோத்தாரி, திரு.சரவணன் அடங்கிய அமர்வு, நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பான நடவடிக்கைகள், ஒதுக்கப்படவுள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கை ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00