தமிழகத்தில் புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Dec 5 2019 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து இவ்வழக்‍கில் தீர்ப்பு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், வார்டு மறுவரையறை பணிகள் முழுமையாக முடியும் வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்‍கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் நேற்று மனுதாக்‍கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகுமா? அல்லது ரத்தாகுமா? என்பது பிரச்சனை அல்ல என்றும், தேர்தல் அறிவிப்புக்‍கு பிறகு சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதே கேள்வி என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். புதிய மாவட்டங்கள் அறிவிக்‍கப்பட்டதால், அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை தொடர்பான பணிகளில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்‍கின்றனவா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து தெரிவிக்‍குமாறு, தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த தயார் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதயைடுத்து, விசாரணை நிறைவடைந்து வழக்‍கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00