மாண்புமிகு அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு : டிடிவி தினகரன் தலைமையில், சென்னையில் பல்லாயிரக்‍கணக்‍கானோர் மௌன ஊர்வலமாகச் சென்று நினைவிடத்தில் அஞ்சலி

Dec 5 2019 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, சென்னை கடற்கரையில் உள்ள அம்மாவின் நினைவிடத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அ.ம.மு.க. நிர்வாகிகளும், பல்லாயிரக்‍கணக்‍கான தொண்டர்களும் பங்கேற்றனர்.

இறுதி மூச்சு வரை தமிழகத்தின் நலனையே மனதில் கொண்டு செயல்பட்டு ஒப்பற்ற ஆளுமையாக விளங்கிய மாண்புமிகு அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாசிலை அருகில் இருந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில், பல்லாயிரக்‍கணக்‍கான கழகத் தொண்டர்களும், பொதுமக்‍களும் மௌன ஊர்வலம் சென்றனர்.

புரட்சித் தலைவி அம்மா துயில் கொள்ளும் மெரினா கடற்கரை நினைவிடத்தில், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், மலர்தூவியும், மலர்வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தலைமையில் அ.ம.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றனர்.

இதில், கழக துணைத் தலைவர் திரு. அன்பழகன், கழக துணைப் பொதுச் செயலாளர்கள் திரு. P.பழனியப்பன், திரு. ரங்கசாமி, கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்கள் திரு. செந்தமிழன், மாணிக்‍கராஜா, கழகப் பொருளாளர் திரு. வெற்றிவேல், கழக கொள்கைபரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, ஊராட்சி, கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00