பணியின் கால அளவை 8 மணி நேரமாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவாதம்

Nov 19 2019 9:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு பணி நேரத்தை, 8 மணி நேரமாக நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பணி நேரத்தை 8 மணி நேரமாக, நிர்ணயித்து தமிழக அரசு 2015-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ரவீந்திரநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டதின்படி, தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரக துணை இயக்குனர் இந்துமதி நேரில் ஆஜரானார். அப்போது, பணி நேரம் நிர்ணயித்து அரசு பிறப்பித்த உத்தரவு கண்டிப்புடன் பின்பற்றப்படுவதாகவும், சில அவசர சூழ்நிலைகளின்போது மட்டும், மருத்துவர்கள் கூடுதல் நேரம் பணி செய்ய வேண்டியுள்ளதாகவும் இந்துமதி தெரிவித்தார். மேலும், 2015-ம் ஆண்டு பணி நேரம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை, முறையாக அமல்படுத்துவதற்கான நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.

இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00