சென்னை மாநகர் முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் - மாநகராட்சிக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Nov 19 2019 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மாநகர் முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தவும், நடைபாதை வியாபாரிகள் குறித்து கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மாநகரில் நடைபாதைகளை முறையாக பராமரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் முந்தைய விசாரணையின்போது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது. அதன்படி நீதிபதிகள் திரு. சத்திய நாராயணன், சேசஷாயி அடங்கிய அமர்வு முன்பு சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் ஆஜரானார்.

அப்போது, தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் சட்டப்படி சென்னை முழுவதுமுள்ள 15 மண்டலங்களிலும் உள்ள நடைபாதை வியாபாரிகளின் விவரங்களை கணக்கெடுத்து, அதுதொடர்பாக கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தவும், சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00