குளச்சல் அருகே குடும்பத்துடன் வந்து கலச பூஜை நடத்துவதாகக்‍ கூறி திருட்டு - தங்க நகைகளை நூதனமாக கொள்ளையடித்த குடுகுடுப்பைக்‍கார கும்பல்

Nov 17 2019 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கலச பூஜை என்ற பெயரில் ஒரு குடுகுடுப்பைக்கார கும்பல் நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம், அங்குள்ள பெண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் செபியா மேரி. அவரது வீட்டிற்கு குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் 2 பெண் உட்பட 8 பேர் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். குறி சொல்ல ஆரம்பித்த அவர்கள், செபியா மேரிக்கு தாலி தோஷம் இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்ய 2500 ரூபாய் வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் இரவில் மாந்திரீக பூஜை நடத்தி வீட்டில் உள்ள ஒவ்வொரு நபர்களின் நகைகளையும் மஞ்சள் துணியில் போட்டு கலசத்துக்குள் வைத்து பூஜை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பி செபியாவும் நகைகளை வைத்து பூஜைக்கு அனுமதித்துள்ளார். இரவு பூஜைகள் முடிந்த பின்னர் காலையில் கலசத்தில் உள்ள நகைகளை எடுத்து அணிந்துகொள்ளலாம் எனக் கூறி அவர்களும் அங்கேயே தங்கியுள்ளனர். பின்னர் அனைவரும் உறங்கியதும் அங்கிருந்து அந்த கும்பல் நகைகளுடன் ஓட்டம் பிடித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குடுகுடுப்பைகார கும்பலை தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00