தருமபுரி மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தடுத்த அரசு அதிகாரிகள் - கழக நிர்வாகிகளுடன், காவல் துறையினர் கடும் வாக்குவாதம்

Nov 17 2019 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே, சாலையோரம் மரக்கன்றுகள் நடுவதற்கு அ.ம.மு.க., நிர்வாகிகளுக்‍கு அனுமதி மறுக்கப்பட்டதால், கழக நிர்வாகிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அரூர் அடுத்த கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே, அ.ம.மு.க., சார்பில் மரக்கன்று நடும் பணியை, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. பழனியப்பன் தலைமையில் நடத்த கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். சமூக நோக்கத்தோடு நடைபெறவிருந்த இப்பணிக்‍கு, காவல் துறை, வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதி தர மறுத்து விட்டனர். மேலும், கழகக்‍ கொடிகளை அகற்றியும், மரக்கன்றுகள் நட தோண்டப்பட்ட குழிகளையும் மூடியும் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

மரக்கன்றுகள் நடுவதற்காக வருகை தந்த கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.பி பழனியப்பன், கழக மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணைச் செயலாளர் திரு. ஆர்.ஆர்.முருகன், தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் திரு. டிகே. ராஜேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளையும் காவல் துறையினர் தடுத்தனர். இதனால் காவல் துறையினருக்கும், கழக நிர்வாகிகளுக்‍கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அருகில் உள்ள விவசாய நிலத்தில் கழக நிர்வாகிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு.பி.பழனியப்பன், காலியாக இருக்கிற இடங்களில் எவ்வளவு மரக்கன்றுகள் வேண்டுமானாலும் நட்டு வளர்க்கலாம் என்ற வாய்மொழி உத்தரவின்படியே அதற்கான ஏற்பாடுகளை செய்தாகக்‍ கூறினார். ஆனால் காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி, எங்களை சமூக விரோதிகளை போல எண்ணி, கழகக்‍ கொடிகளை அப்புறப்படுத்தினர் என்றும் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00