குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுத்த செவிலியர் : அரசு மருத்துவமனை செவிலியர் பணியிடை நீக்கம்

Nov 15 2019 2:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அரசு மருத்துவமனையில், குழந்தைகளுக்‍கு தடுப்பூசி போட மறுத்த செவிலியர் பணியிடை நீக்‍கம் செய்யப்பட்டார்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள கழுநீர்குளம் பகுதியைச் சேர்ந்த குருசாமி-விஜயசாந்தி தம்பதியினர் திசையன்விளையில் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்‍கு தடுப்பூசி போடுவதற்காக திசையன்விளையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்‍கு சென்றனர். அங்கிருந்த கிராம சுகாதார செவிலியர் மேரி தங்கம், தடுப்பூசி போட முடியாது என்று திட்டவட்டமாக கூறியதை குருசாமி செல்ஃபோனில் பதிவு செய்ததை அடுத்து, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செவிலியரின் அராஜகம் குறித்து, மருத்துவரிடம் எழுத்து பூர்வமாக குருசாமி புகார் அளித்தார். இதுதொடர்பாக நெல்லை சமாதானபுரத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர் துறை துணை இயக்‍குனர் திரு. செந்தில்குமார் விசாரணை நடத்தி, செவிலியர் மேரி தங்கத்தை பணியிடை நீக்‍கம் செய்து உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00