பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ள ஒற்றை யானை "அரிசி ராஜா"வை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்

Nov 12 2019 8:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ள ஒற்றை யானை "அரிசி ராஜா"வை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

பொள்ளாச்சி அடுத்துள்ள உள்ள நவமலை மற்றும் அர்த்தனாரி பாளையம் பகுதியில், ஒற்றை யானை ஒன்று கடந்த 6 மாதமாக சுற்றித்திரிந்து வருகிறது. குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து அரிசியை தின்றுவந்ததால் இந்த யானைக்கு" அரிசி ராஜா என பெயர் வைக்கப்பட்டது. இந்த யானை தாக்கியதில், கடந்த மே மாதம் 2 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் என்ற விவசாயியும், மூதாட்டி ஒருவரும் உயிரிழந்தனர். யானையைப் பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, 2 கும்கி யானைகள் வர வைக்கப்பட்டன. அர்த்தனாரி பாளையம் பகுதியில், தொடர்ந்து மழை பெய்ததால், யானையை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக, வனத்துறையினரும் கால்நடை மருத்துவர்களும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00