குரூப்-2 தேர்வு பழைய முறையிலேயே நடத்தக்‍கோரிய வழக்‍கு : தமிழக அரசு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு

Oct 15 2019 9:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

குரூப்-2 தேர்வினை பழைய முறையிலேயே நடத்த பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் மந்திரி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்‍கல் செய்திருந்தார். அதில், சமீபத்தில் குரூப்-2 தேர்வுகளுக்கான புதிய பாடத் திட்டத்தில், 175 வினாக்கள் பொது அறிவியலில் இருந்தும், 25 வினாக்கள் கணிதத்தில் இருந்தும் கேட்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் குரூப்-2 தேர்விற்காக தயார் செய்து வரும் நிலையில், பழைய பாட திட்டத்தில் உள்ள 100 மதிப்பெண்களுக்‍கான தமிழ் வினாக்கள் அகற்றப்பட்டதால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், அதே போல் குரூப்-2 மெயின் தேர்வில், 100 மதிப்பெண்களுக்கு தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது, கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களை பெருமளவில் பாதிக்கும் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஆகவே, குரூப்-2 தேர்விற்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்து, பழைய முறையிலேயே தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு. சிவஞானம், திரு. கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, மனு குறித்து, தமிழக அரசு பரிசீலனை செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00