பா.ஜ.க. அரசிடம் சரியான கொள்கைகள் இல்லாததே பொருளாதார மந்தநிலைக்கு காரணம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் சரமாரி குற்றச்சாட்டு

Oct 15 2019 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாரதிய ஜனதா அரசிடம், சரியான கொள்கைகள் இல்லாததே நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு காரணம் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான திரு. பரகல பிரபாகர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்துவரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனின் கணவர் திரு. பரகல பிரபாகர், மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கைகளை சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.

பொருளாதார நிபுணரான திரு. பரகல பிரபாகர், 'பொருளாதாரத்தை வழிநடத்த ஒரு துருவ நட்சத்திரம்' என்ற தலைப்பில் ஆங்கில நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், மத்திய பா.ஜ.க. அரசுக்‍கென பலமான பொருளாதார கொள்கைகள் இல்லாததே பொருளாதார மந்தநிலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

நேருவின் பொருளாதார கொள்கையை விமர்சிப்பது அரசியல் தாக்குதலாகவே உள்ளது என்பதை பா.ஜ.க.வின் தலைமை இன்னும் புரிந்து கொள்ளாமலே உள்ளதாகவும், அரசியல் நிலவரம், தேசியவாதம், நாட்டின் பாதுகாப்பு போன்ற தளத்தில் மட்டுமே பா.ஜ.க. கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

திரு.பி.வி.நரசிம்மராவ், திரு.மன்மோகன் சிங் ஆகியோரின் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் இன்றைய காலக்கட்டத்திலும் சவால் விட முடியாதவைகளாகவே உள்ளதாகவும், அவர்களின் கொள்கையை, பா.ஜ.க. அரசு முழுமையாக பின்பற்றுவதன் மூலம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00