கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு : வழக்கை வாபஸ் பெற தமிழிசை சவுந்தராஜனுக்கு அனுமதி

Oct 14 2019 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மக்களவை தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் திருமதி கனிமொழியும், பாஜக சார்பில் திருமதி. தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர். இதில், கனிமொழி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கனிமொழி, சிங்கப்பூர் குடிமகனான தனது கணவர் அரவிந்தனின் வருமானத்தைப் பற்றி, வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்றும், அதை மறைத்தது தவறு என்பதால், கனிமொழியின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து அண்மையில், கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றதால், வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என தமிழிசை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற, தமிழிசை சவுந்தராஜனுக்கு அனுமதி அளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00