டிடிவி தினகரன் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல்

Oct 14 2019 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

கடலூர் மேற்கு மாவட்டம் திருமுட்டம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக, பேருந்து நிலையம், பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. கே.எஸ்.கே. பாலமுருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில். தென்கீரனூரில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியினை மாவட்ட கழகச் செயலாளர் திரு. கோமுகி மணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் திரு.பால்ராஜ், மாவட்ட அவைத் தலைவர் திரு.பாண்டியன், ஒன்றிய கழக செயலாளர்கள் மதுசூதனன், நகர செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், திண்டுக்கல் பழைய பேருந்து நிலையம், பேரறிஞர் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் அருகில், கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ராமு தேவர் தலைமையில், கழக நிர்வாகிகள் நிலவேம்பு குடிநீரை, பொதுமக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் திரு. செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட மாணவரணி சார்பில், கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு நிலவேம்பு குடிநீர வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் திரு. பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் கழக தொண்டர்கள்கலந்து கொண்டனர். இதேபோல் காந்தி நகர் பைபாஸ் மீனாட்சி திரையரங்கம் பகுதியில், பொதுமக்‍களுக்‍கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் ஏழுமலை, மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபு உள்ளிட்ட ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00