திருநெல்வேலி அருகே பிரச்சாரத்திற்கு சென்ற திமுக எம்எல்ஏ-வை கிராம மக்‍கள் விரட்டியடிப்பு - தங்கள் கோரிக்‍கைகளுக்‍காக திமுக போராடவில்லை என குற்றச்சாட்டு

Oct 9 2019 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருநெல்வேலி அருகே பிரச்சாரத்திற்கு சென்ற திமுக எம்எல்ஏ-வை கிராம மக்‍கள் விரட்டியடித்தனர்.

நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு, பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பள்ளர் சமூகம் உள்பட 7 உட்பிரிவுகளை, தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வலியுறுத்தி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலித் கிராமப்புற வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே நாங்குநேரி சுற்றுவட்டார கிராமங்களில் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட கிராம மக்‍கள் எதிர்ப்பு தெரிவித்த வருகின்றனர். இந்நிலையில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டி கிராமத்திற்கு, ஆலங்குளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பிரச்சாரம் செய்ய சென்றுள்ளார். அப்போது தங்களது கோரிக்‍கை தொடர்பாக திமுக போராடவில்லை என, அவருடன் கிராம மக்‍கள் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பூங்கொடி பிரச்சாரம் செய்யாமல் திரும்பி சென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00