திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 10-க்‍கும் மேற்பட்டோருக்‍கு டெங்கு காய்ச்சல் அறிகுறி - கழிவு நீர் கால்வாய்கள் இல்லாததால் நோய் பரவும் அபாயம்

Oct 9 2019 2:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டில் உள்ள அபிராமி நகர், வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான கணேசன் என்பவரது மகன் தசரதன் கடந்த 5 நாட்களாக டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சென்னை கே.எம்.சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். மேலும், 6 ம் வகுப்பு பயிலும் கணேசனின் மகள் நாகஜோதியும் அண்மையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர்கள் மட்டுமின்றி அதே பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. கழிவு நீர் கால்வாய்கள் முறையாக அமைக்கப்படாததால், கழிவு நீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி கொசு உற்பத்தியாவதோடு நோய் தொற்றும் ஏற்படுவதாக அங்குள்ள மக்‍கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருவேற்காடு நகராட்சியில் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00