கொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை

Oct 3 2019 9:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் கொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரத்தை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

மதுரை டிவிஎஸ் நகர் பகுதியை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான பாண்டியன், சிறுவயதிலிருந்து பல்வேறு இயந்திர செயல்பாடு தொடர்பான சாதனங்களை கண்டறிவது ஆர்வம் கொண்டிருந்தார். வெளிநாடுகளில் பணியாற்றி வந்த அவர் இந்தியாவிற்கு விடுமுறைக்காக வந்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்ந்து, அதனை தடுக்க புதிய கருவி ஒன்றை கண்டுபிடிக்க திட்டமிட்டார். இரண்டு ஆண்டுகள் கடுமையான உழைப்பின் காரணமாக தற்போது வீட்டில் கொள்ளை கொள்ளை அடிக்க வந்தால் கதவை உடைக்கும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு போகும் வகையில் சென்சார் பாதுகாப்பு இயந்திரம் ஒன்றை வடிவமைத்தார். இதன் மூலம் கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபடும்போது பாதுகாப்பு அலாரம் ஒலி எழுப்புவதோடு, வீட்டு உரிமையாளர் அழைப்பை ஏற்காத சமயங்களில் அவருடைய உறவினர் மற்றும் அருகே உள்ள காவல் நிலையங்களின் செல்போன்களுக்கு அழைப்புகள் செல்லும்.

தற்போது இந்த பாதுகாப்பு இயந்திரத்தை மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பார்வையிட அனுமதி வேண்டி காத்திருப்பதாகவும் தன்னுடைய கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தால் கொள்ளைகளை தடுக்க உதவியாக இருக்குமென பாண்டியன் தெரிவிக்கிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00