திருவண்ணாமலையில் செயற்கை கருவூட்டல் செய்வதாகக் கூறியதால் ரூ.3 லட்சம் இழந்த தம்பதி - மருத்துவமனை முன்பு குடும்பத்துடன் போராட்டம்

Sep 18 2019 7:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலையில், செயற்கை கருவூட்டல் செய்வதாகக் கூறி, 3 லட்சம் ரூபாய் ஏமாற்றிய தனியார் மருத்துவமனை முன்பு, பாதிக்‍கப்பட்ட தம்பதியினர் குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை அடுத்த ஓரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவகுமார் - உமா தம்பதியினரின் 2 குழந்தைகள், கடந்த கடந்த சில ஆண்டுகளுக்‍கு முன்பு, ஆற்றில் குளிக்கும்போது அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதனால், மீண்டும் குழந்தை வரம் வேண்டி முயற்சித்த நிலையில், சின்னகடைத் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளனர். செயற்கை கருவூட்டல் முறையில் கருத்தரிப்பு செய்வதாகக் கூறி, மருத்துவமனை நிர்வாகம் 3 லட்சம் ரூபாயை அவர்களிடம் இருந்து வசூலித்துள்ளனர். ஆனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகியும் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால், விரக்தியடைந்த தம்பதியினர், பணத்தை திரும்ப கேட்டு, உறவினர்களுடன் மருத்துவமனை முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதிக்‍கப்பட்ட பெண் உமா மயக்‍கமடைந்ததால், பரபரப்பு நிலவியது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00