திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்பதில்லை என குற்றச்சாட்டு - கோட்டாட்சியருக்‍கு அழைப்பு விடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்

Sep 17 2019 7:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்திற்கு வருவாய்துறை அலுவலர்கள், துறை அலுவலர்கள் உரிய முறையில் பங்கேற்காததற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், கூட்டத்தைப் புறக்‍கணித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு மாதமும் தாலுக்கா அளவிலான விவசாயிகள் கூட்டம் முதல் செவ்வாய்க்‍கிழமை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோட்டாட்சியர், வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் துறை அதிகாரிகள் முறையாக கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதாகவும், வேளாண்மை துறையின் சார்பில் நடைபெறும் கூட்டத்தினால் தங்களது குறைகள் எதுவும் நிவர்த்தி செய்யப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் இந்த கூட்டம் வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள், குறைதீர்வு கூட்டத்தினை புறக்கணித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00