பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் உறவினர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு

Sep 17 2019 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை பள்ளிகரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ், கடந்த 12-ம் தேதி, பள்ளிக்கரணை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் வரும்போது, திருமண விளம்பரத்திற்காக கட்டிவைக்கப்பட்டிருந்த பேனர் அறுந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறி விழுந்த சுபஸ்ரீ மீது, தண்ணீர் லாரி மோதியதில் சம்வவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அரசியல் கட்சி தலைவர்களால் பதாகைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிடும்படி செய்தது. இந்த விபத்து தொடர்பாக பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்தால், அவர் எளிதில் ஜாமினில் வெளிவந்து விடுவார் என எதிர்ப்பு எழுந்ததால், ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00