அமைச்சரின் தொகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சாலைகள் - பயன்பாட்டிற்கு வரும் முன்பே சேதமடைந்ததால் பொதுமக்‍கள் வேதனை

Sep 11 2019 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, எடப்பாடி அணியைச் சேர்ந்த அமைச்சரின் தொகுதியில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலைகள், பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே, கையால் பெயர்த்து எடுக்கும் அளவுக்‍கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்‍கள் வேதனை தெரிவித்துள்ளதுடன், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தொகுதியான திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட செங்கப்படை கிராமத்தில், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் செங்கப்படை முதல் புளியம்பட்டி வரை 1 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலைகள் மற்றும் ஆங்காங்கே குறுகிய பாலங்கள் கட்டும் பணிக்காக, அரசு சார்பில், ஒரு கோடியே 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த சாலை ஒப்பந்தப் பணியை அதிமுக-வைச் சேர்ந்த கள்ளக்‍குடி ஒன்றிய செயலாளரின் சகோதரர் ராமையா எடுத்திருந்தார். இந்தப் பணிகள் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் செங்கப்படையிலிருந்து புளியம்பட்டி வரை சாலைகள் மற்றும் 3 புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் அமைத்து 3 மாத காலமாகி பயன்பாட்டிற்கு வரும் முன்பே அப்பளம்போல் மேலோட்டமாக போடப்பட்டுள்ளன. மேலும், பாலத்தின் சுற்றுச்சுவர் எளிதில் உடையும் நிலையில் தரமற்றதாக உள்ளது. தரமற்ற இந்த சாலைகளின் மோசமான நிலை, தற்போது மழை பெய்தால் மக்‍களின் 20 ஆண்டுககல கனவு பாழாகிவிடும் என அப்பகுதி கிராம மக்‍கள் வேதனை தெரிவிக்‍கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00