சேலம் உருக்‍காலையை தனியார் மயமாக்‍குவதற்கு எதிர்ப்பு - அனைத்து தொழிற்சங்கங்கள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

Aug 22 2019 7:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் உருக்‍காலையை தனியார் மயமாக்‍கும் மத்திய அரசின் முயற்சிக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற பின்னர், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சேலம் உருக்‍காலையை, தனியாருக்‍கு தாரைவார்க்‍கும் முயற்சிக்‍கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஒரு மாத காலமாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் உருக்‍காலையின் பங்குகளை விற்பனை செய்ய, டெண்டருக்‍கு அழைப்பு விடுக்‍கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்ற, மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்து, உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் திரு. எஸ்.கே செல்வம், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் திரு. வெங்கடாசலம், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. மாதேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00