ஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உலக சாதனை

Aug 23 2019 7:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், கல்லூரி மாணவர், ஒரு கிலோ எடை கொண்ட இரும்பு சங்கிலியால் ஒரு கையை கட்டிக்‍கொண்டு 10 கிலோமீட்டர் தூரம் கடலில் நீந்திச்சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மீனவக்‍ கிராமத்தைச் சேர்ந்த மாணவர் சபரிநாதன், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சபரிநாதன் சிறுவயது முதலே நீச்சலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சிறப்பு பயிற்சிகளைப் பெற்று, கடந்த 2017-ஆம் ஆண்டு கை மற்றும் கால்களை இரும்பு சங்கிலியால் பூட்டுப் போட்டு பூட்டிக் கொண்டு, நாகூர் துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகம் வரை 5 கிலோ மீட்டர் துாரத்தை கடந்து சாதனை படைத்தார். இந்நிலையில், இந்த சாதனைகளை முறியடிக்கும் விதமாக இன்று இரும்பு சங்கிலியால் ஒற்றைக் கையை கட்டிக்கொண்டு வேளாங்கண்ணியில் இருந்து நாகை வரை 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தினார். 3 மணிநேரம் 17 நிமிடங்களில், 10 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி அவர் உலக சாதனை படைத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00