ராஜீவ்காந்தி வழக்‍கில் பரோலில் வெளியே வந்துள்ள நளினிக்‍கு மேலும் 3 வாரங்களுக்‍கு பரோல் நீட்டிப்பு - மகள் திருமண ஏற்பாட்டையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Aug 22 2019 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி, முருகன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையில் சுமார் 28 ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவர் தனது மகளின் திருமண ஏற்பாடுகளை செய்ய, கடந்த மாதம் 5-ம் தேதி, ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பரோலில் வந்த நளினி, வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்காராயர் வீட்டில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

வரும் 25-ம் தேதியுடன் பரோல் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க வேண்டும் என நேற்று முன்தினம், நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், அவரது பரோலை, மேலும் 3 வாரங்கள் நீட்டித்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00